Tuesday, 20 November 2018

அல் - அமீன் 12 (10)

அல் அமீன் 12
தானியங்கு மாற்று உரை இல்லை.

(10 )

சிலந்தி வலையின் திறனும் 
இல்லாதவர்கள் 
சிந்தனையெனும் சிற்பக் கூடாரத்தில் 
வாழ்ந்து கொண்டிருந்தார்கள்... 
குறைஷிகளின் கோபக் கொப்புளங்கள் 
சீழ் பிடித்து வழிந்தன... 
அண்ணலாரை கொல்லும் பணி 
ஆளாளுக்கு வழங்கப்பட்டது...

'அவர்கள் 
சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள் 
அல்லாஹூவும் 
சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்'

கஸ்தூரியின் மணம் 
மதினத்தின் முழு வசமானது... 
அல் அமீனின் தடம் பட்ட நகரம் 
மதியாளர்களின் கூடாரமானது... 
வட்டி, மது மரணித்து மஹர் 
திருமணங்கள் மணமேடைக் கண்டன... 
விதவைகள் என்ற சொல் 
வீணாய்ப் போனது... 
கல்வி நதி கடலாய் வழிந்தது... 
ஜக்காத்தும் சதக்காவும் கடமையாகின... 
உலகம் இப்போது அவர்களை 
உற்று நோக்கத் தொடங்கியது... 
தடைகளை அவர்கள் 
தடம் தாண்டி நகர்ந்தார்கள்... 
மதினத்தின் பாங்கு சப்தம் 
மக்காவில் 
மனாத்தையும் லூத்தையும் ஆட்டியது.... 
மாஷா அல்லாஹ்!

- மு.முகமது பாட்சா* 
21 /11 /2018

மஹர் - ஆண் பெண்ணிற்கு தரும் வரதட்சனை
ஜக்காத் - வருவாயில் தரும் தருமம்
சதக்கா - மனம் உவந்து தரும் தருமம்
(படம்: நபி(ஸல்) அவர்களின் அறை

No comments:

Post a Comment

Popular Posts