
எரியும் நெரிப்பிற்குள் என்னை
புதைத்துக் கொள்கிறேன்...
எழுந்துவரமுடியாத பீனிக்ஸ்
தன் அலறலைப் பதிவு செய்கிறது....
குதிரையென்று பயணம் செய்தவன்
வழியில் இறங்கிக்கொள்கிறான்..
பழங்களின் தோட்டமென்றவன்
கடித்துபோட்ட மிச்சம்
காயங்களாக விரவிக்கிடக்கின்றன
மதுக்குடுவை
எப்போதுமே நிரம்பி வழிகிறது...
வாசித்த புத்தகம்
அடிக்கடி வாசிக்கப்படுகிறது...
வர்ணனைகளை வாரி இறைத்தவன்
மலருக்குள் உறங்கிப்போனான்...
கட்டில் முழுவதும்
இரைந்து கிடந்தன கவிதைப்பூக்கள்
இரவிற்கு ஆடைகள் கிடையாது!
எத்துணை யோனிகள்
நட்சத்திரங்களாகச் சிதறிக்கிடக்கின்றன?
நிலவின் பழுத்தமுகம்
உறக்கமில்லாத இரவுகளால்தானே?
வெட்கமில்லாத
இந்தக் கவிதையின் மீது எச்சில் துப்பும்போது
உங்கள் முகத்தையும்
சற்றே துடைத்துக் கொள்ளுங்கள்.
- மு.முகமது பாட்சா*
29/11/2018
No comments:
Post a Comment