Friday, 23 November 2018

துப்பிய எச்சில்

தானியங்கு மாற்று உரை இல்லை.

உண்டு என்பவனும் அடித்துக் கொள்கிறான் 
இல்லையென்பவனும் அடித்துக் கொள்கிறான் 
எதற்காகவோ 
வார்த்தைகளை இறைத்துக் கொள்கிறார்கள் 
நிழலைப் பிடித்துச் சிற்பம் செய்வதும் 
சிற்பத்தைப் பிடித்து நிழலை வளர்ப்பவர்களும் 
மறந்தே போகிறார்கள் 
மாராப்பு விலக்கி நிற்கும் அவலத்தையும் 
மல்லாக்க துப்பிக் கொள்ளும் எச்சில்களையும் 

- மு.முகமது பாட்சா* 
23 /11 /2018 
 

No comments:

Post a Comment

Popular Posts