Wednesday, 7 November 2018

ஆபத்பாந்தவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

அந்த உலகம் 
அவர்களுக்கு வேறாகவே இருந்தது... 
கை தட்டியதும் காற்று வந்தது 
காரின் கதவுகள் தானாக திறந்து கொண்டன 
தடவிக் கொடுக்க டாபர்மேன் 
முத்தம் கொடுப்பதற்காக உச்சவிலை மது பாட்டில் 
நுனி நாக்கில் ஆங்கிலம் 
போதையேற்றிக்கொள்ள 
ரசிகர்களின் கைதட்டல் விசில் சப்தம் 
இத்தனைக்கும் நடுவில் 
அவர்களுக்கும் பொறுப்பு வந்திருந்தது... 
இந்த உலகத்தைக் கார்ப்ரேட்டுகளிடமிருந்து 
உடனே காப்பாற்றுவது. 

- மு.முகமது பாட்சா* 
08 /11 /2018 

No comments:

Post a Comment

Popular Posts