அல் அமீன் 12

(9)
வில் வீரர் ஹம்சா ரலி
அல் அமீனின் அரணாய் நின்றார்
முகம்மது ஸல்
துஆவையேற்று உமர் ரலியும்
ஓரணியில் சேர்ந்தார்
ஈமானின் பலத்தோடு
ஈட்டிகளின் வலுவும் சேர
இஸ்லாத்தின் தூண்களெல்லாம்
உறுதியாகி உயர்ந்து நிற்க...
எதிரிகளின் உறுதி மயஙகி
தூது உத்பாவின் பேச்சும் முறிந்தது!
ஆசைகளைக் கொட்டி வைத்து
அல் அமீனை விலைக்குக் கேட்க
அல்லாஹூ அக்பர் என்ற
முழக்கம்தான் மிகைத்தெழுந்தது...
நகர் மதினாவின் கோத்திரத்தார்கள்
மாண்புடன் நேசம் காட்ட
முஸ்அப் இப்னு உமைரின்
அழைப்புப்பணி அழகாய் சிறந்தது
மக்காவின் மனம்
குப்ருவில் சூழ்ந்து கொள்ள...
நகர் மதினத்து வாசிகள்
வாசனா திரவியம் பூசிக் கொண்டனர்
துரத்தியது ஓர் நகரம் அல் அமீனை
அல்லாஹூ அக்பர்
அண்ணலாரை
அல்லாஹூவிடம் கையேந்தி அழைத்தது
மதினத்து அன்சாரிகள் கூட்டம்.
- மு.முகமது பாட்சா*
19/11/2018

(9)
வில் வீரர் ஹம்சா ரலி
அல் அமீனின் அரணாய் நின்றார்
முகம்மது ஸல்
துஆவையேற்று உமர் ரலியும்
ஓரணியில் சேர்ந்தார்
ஈமானின் பலத்தோடு
ஈட்டிகளின் வலுவும் சேர
இஸ்லாத்தின் தூண்களெல்லாம்
உறுதியாகி உயர்ந்து நிற்க...
எதிரிகளின் உறுதி மயஙகி
தூது உத்பாவின் பேச்சும் முறிந்தது!
ஆசைகளைக் கொட்டி வைத்து
அல் அமீனை விலைக்குக் கேட்க
அல்லாஹூ அக்பர் என்ற
முழக்கம்தான் மிகைத்தெழுந்தது...
நகர் மதினாவின் கோத்திரத்தார்கள்
மாண்புடன் நேசம் காட்ட
முஸ்அப் இப்னு உமைரின்
அழைப்புப்பணி அழகாய் சிறந்தது
மக்காவின் மனம்
குப்ருவில் சூழ்ந்து கொள்ள...
நகர் மதினத்து வாசிகள்
வாசனா திரவியம் பூசிக் கொண்டனர்
துரத்தியது ஓர் நகரம் அல் அமீனை
அல்லாஹூ அக்பர்
அண்ணலாரை
அல்லாஹூவிடம் கையேந்தி அழைத்தது
மதினத்து அன்சாரிகள் கூட்டம்.
- மு.முகமது பாட்சா*
19/11/2018
No comments:
Post a Comment