
வக்கிரம்
வாசற்கதவை தட்டிவிட்டு
வந்து நிற்கிறது,
உள்ளே அழைத்துப் பேசுகிறேன்,
பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போக ...
இருவர் கைகளிலும் இப்போது ஆயுதங்கள்
ஒருவரையொருவர் கொளுத்திக் கொள்கிறோம் ...
சுற்றிலும் வார்த்தைகள் எரிந்து கிடக்கின்றன
பேசாத மொழியொன்றும்
அங்கே பதுங்கிக் கிடக்கிறது,
அவ்வப்போது தர்க்கத்தின் சப்தங்கள்
ஓநாய்களின் ஊளையோடு இழைய...
அந்த அறையைப் பூட்டி சீல் வைத்தவர்கள்
எழுதி வைத்த குறிப்பு: இது பேய் வீடு .
- மு.முகமது பாட்சா*
22/11/2018
No comments:
Post a Comment