அல் - அமீன் 12

(4)
அண்ணல் முகம்மதுவின் வயது 25
ஷாம் நகரத்துச் சந்தை
அல் அமீனின் நறுமணம் பூசிக் கொண்டது
நீதியின் தராசுகள்
நிலுவைகளில் சரியாக நின்றன...
வாடிக்கையாளர்கள்
வாசம் தேடி வரிசையில் வந்தார்கள்...
விதவை கதிஜா பின் குவைலித்தின்
கஜானாக்கள் நிரம்பி வழிந்தன...
அல் அமீனின் அழகிய பண்புகள்
கதிஜா ரலி சீமாட்டியின் நல் வரவுகள்
அடிமையாய் கிடக்க ஆயிரம் பேர் இருக்க
அற்புத வதனம் அல் அமீன் நேசம்
கைம்பெண் என்ற கட்டுடைத்து அண்ணல்
முகம்மதுவும் ஏற்றார் முழு நிலவாய்
தன் முதல் உலகாய்...
நேசரின் சுகமெனவும் கனவெனவும்
கண்களின் காட்சியானர் அன்னை நாயகியார்
ஹூபுல் கடவுளா?
மனாத், லாத், உஜ்ஜாதான் கடவுள்களா?
அடிமைகளுக்கு யார்தான் கடவுள்?
கடவுள்களுக்குள் சண்டையென்றால்
சாமானியனுக்கு அமைதி ஏது?
கேள்விகளுக்குள் புழுங்கியவரை
அரவணைப்பிற்குள் அடக்கிக் கொண்டார் கதிஜா...
அப்போது அன்னையின் வயது 40
- மு.முகமது பாட்சா*
13/11/2018
No comments:
Post a Comment