
அந்த மேடை
எனக்கு விசித்திரமாக இருந்தது...
அவர்களை
அவர்களே புகழ்ந்து கொண்டார்கள்...
அவர்களுக்குள் அவர்கள்
ஒளிந்து கொள்ளவும் செய்தார்கள்...
சுயமிகளுக்குள்
ஒருவரையொருவர் பதுக்கியும் கொண்டார்கள்
கட்டித் தழுவிக் கொள்ளும்போது
புகை மெல்ல வெளியேறியது...
வார்த்தைகளின் சாரல் வியாபிக்க
கைதட்டல்கள்
இடி, மின்னல்களை இறக்கியது...
காட்சி முடிந்ததும் தங்களின்
முகமூடிகளைக் கழற்றி
கையுறைகளுக்குள் பதுக்கிக்கொண்டு
பத்திரமாக நடந்தார்கள்.
- மு.முகமது பாட்சா*
01 /11 /2018
No comments:
Post a Comment