
தோழர்கள் கூடுகிறார்கள்
பேசுகிறார்கள் கலைகிறார்கள்
அங்குத் துண்டு மின்னல் வெளிச்சங்கள்
சிதறிக்கிடக்கின்றன
கூடவே கொஞ்சம்
இரத்தத் துளிகளும் சில பிணங்களும்
உண்டியல் எண்ணிய பிறகு
அடுத்த போராட்டம் தொடர்கிறது...
வேதனைகளில் வீழ்ந்தவர்கள்....
அங்கும் வேடிக்கை பார்க்கிறார்கள்
சிதறிக் கிடக்கும் கொடியினையொருவன்
கோமணத்திற்கும்
தடியினையொருவன் ஆட்டுத் துறட்டிக்கும்
எடுத்துச் செல்கின்றனர்
இரங்கல் கூட்டத்தோடு முடிந்தது
தோழரின் இறுதி ஊர்வலம்
வீர வணக்கத்தை வாங்கிக் கொண்டு
வேலைக்கு அலையும்
அவரின் மகனைப் பார்த்தால் சொல்லுங்கள்
நீயாவது குடும்பத்தையும் பாரு!
- மு.முகமது பாட்சா*
21/11/2018
No comments:
Post a Comment