Friday, 16 November 2018

அல் - அமீன் 12 (6)

அல் - அமீன் 12 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம் மற்றும் வானம்

(6)

'போர்த்துங்கள்... 
கதிஜாவே என்னைப் போர்த்துங்கள்' 
அச்சம் சூழ்ந்த அல் அமீன் 
அங்கம் நடுங்கிடச் சோர்ந்தார் ! 

உஷ்ணம் எகிறியது... 
முதியவர் வரகாவின் வருகை மொழி 
அறியும் வரை... 

;அச்சம் போர்த்தாதீர்கள் 
அறிவொளியே இத்தரையின் மீது 
இனி நீர்தான் இறுதி நபி... 
முத்திரையாய் 
முன் வேதம் முடிந்துவைத்ததை 
முகவுரையாய் 
உம்மிடம் மொழிகின்றேன்... 
உம்மைக் கட்டித் தழுவியவர், 
கரம் கோர்த்து 
ஓதுவீராக! நன்மாரயம் கொட்டியவர் 
நாமூஸ் என்னும் ஜிப்ரில் (அலை)தான் 
நீர் உம்மிதான் என்றாலும் 
உடையவன் சொல்லுகின்றான்... 
உதாசீனம் இனி செய்யாதீர்கள்! 
உம்மிடம் அவர் 
கொட்டிய திரு வசனம் சொல்வீராக... 
நானும் என் இதயத்தில் ஏந்துகிறேன்' 

அச்சம் அகன்ற அல் அமீன் 
கட்டித்தழுவி எத்தினார் அவ்வசனம் 
இறையருள் ஏந்தியே... 

'ஓதுவீராக! 
படைத்த இறைவனின் திருப்பெயரால் 
நீங்கள் ஓதுவீராக! 
அவனே மனிதனை அலக் என்னும் 
கருவிலிருந்து படைக்கிறான். 
நீங்கள் ஓதுங்கள்! 
உம் இறைவன் மாபெரும் கொடையாளி! 
(அல்குர்ஆன் 96 : 1-6) 
--------------------------------------------
*உம்மி - எழுத படிக்கத் தெரியாதவர்
*அலக் - கருவான இரத்தக்கட்டி
--------------------------------------------

- மு.முகமது பாட்சா*
16 /11 /2018

No comments:

Post a Comment

Popular Posts