Saturday, 10 November 2018

அல் - அமீன் 12 (2)

அல் - அமீன் 12

(2)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ரபியுள் அவ்வல் 12 
கிபி 570 
மாஷா அல்லாஹ் மகிழம்பூ வாசம் 
அன்னை ஆமீனா வயிற்றின் பெருந்தவம் 
தந்தை அப்துல்லாவின் 
கண்கள் காணாத அருட் செல்வம் 
அண்ணல் முகம்மதுவின் பூமி தரிசனம் 
அழகு வதனம் 
தாதி ஹலிமாவின் பால் சுவைத்த அதரம் 
அடக்கம் போர்த்திய அற்புதம் 
அப்துல் முத்தலிப்பின் கைவல்யம் 
பனு ஹாஷிம் குலத்தின் நற்பெருமை 
சிறிய தந்தை அபுதாலிப்பின் அற்புத முத்தம் 
அன்பின் அடர்ந்த வாசம்
காஃபா இபுறாஹீமின் மறுவசந்தம் 
இறைத்தூதின் இறுதி வசனம் 
இஸ்லாத்தின் இனிய நறுமணம் 
பகுத்தறிவின் படர்ந்த வானம் 
காலத்தலைவனின் அழகிய கைவண்ணம் 
அண்ணல் முகம்மதுவின் 
ஆன்மா அகிலத்தின் நல்  ஜனனம். 

- மு.முகமது பாட்சா*
11 /11 /2018

No comments:

Post a Comment

Popular Posts