Tuesday, 6 November 2018

நிழலின் தவிப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நடனமாடுகின்றனர்

காற்றின்வெளி 
சப்தக் கூடுகளால் நடுங்குகிறது 
பறவைகள் தங்களின் இதயத்தை 
நிறுத்திச் சுவாசிக்கின்றன 
நிழலின் வியாபிப்பு 
வெளிச்சங்களால் இடறுகிறது 
பரதேசியின் பாதங்களிலும் 
வலிகளின் பாடல்கள் தொடர்கின்றன.... 
இருட்டை 
சிறு அகல் தின்றுவிட ஒற்றை 
மின்னலுக்குத் தவமிருக்கிறது வானம், 
புரியாத கவிதைதான்.... 
நீ சொல்லாத அந்த வார்த்தைகளும். 

- மு.முகமது பாட்சா* 
07 /11 /2018 


No comments:

Post a Comment

Popular Posts