
மந்திரித்த கவிதையொன்று
என்னருகில் கிடக்கிறது
மொழி சுத்தமாக விளங்கவில்லை
அதனருகில் நடப்பவர்கள்
வணக்கம் செலுத்தி செல்கிறார்கள்
அதனை வாசிக்கும் முன்பு
பெரும் நெருப்புச் சூழ்கிறது....
அதனுள் வானம் விரிந்து சப்தமெழ
பறவைகள் இறந்து விழுகின்றன
கடலுக்குள் ஒருத்தி
அழுது கொண்டேயிருக்கிறாள்....
அபசகுனக் கவிதையென்று பெயரிட்டு
புதைத்துவிடுகிறேன்....
நிழலின் நிறம்
இப்போது வெள்ளையாக விரிகிறது....
- மு.முகமது பாட்சா*
03 /11 /2018
No comments:
Post a Comment