அல் - அமீன் 12

(5)
கேள்விகளின் கட்டிடத்தில்
அல் அமீன் அமர்ந்து கொண்டார்.
ஞானத்தின் முதல் வாசல்
அஃதுதானென்பது
அன்று அவரும் அறியாதது.
பிறப்பொக்கும் எல்லா உயிரும்
ஒன்றெனும் போது
பெண்
சிசுக்கள் மட்டும் கொலையாவதேன்?
ஏற்றம் இறக்கம்
மனிதருக்குள் இருக்கலாம்
ஏழ்மைத் துயர் துடைக்க
கைகளேன் உயர்வதில்லை?
உறவுகளென்பது சங்கிலிதான் என்றால்
உதவுவதில் மட்டும்
தீவுகளாய் மாறுவதேன்?
இத்துணைக் கேள்விகளையும்
இழுத்துப்போர்த்திய அண்ணலார்
அச்சம் சூழ்ந்திருந்தார்...
ஞானத்தின் வாசலை அல் அமீனுக்காக
திறந்து வைத்திருந்தது
நான்குக்கு மூன்றடியே கொண்ட
பாறைசூழ் ஹீராவின் குகையை
ஜபல் அன்-நூர் எனும்
அந்த அழகு மலை.
- மு.முகமது பாட்சா*
15/11/2018

(5)
கேள்விகளின் கட்டிடத்தில்
அல் அமீன் அமர்ந்து கொண்டார்.
ஞானத்தின் முதல் வாசல்
அஃதுதானென்பது
அன்று அவரும் அறியாதது.
பிறப்பொக்கும் எல்லா உயிரும்
ஒன்றெனும் போது
பெண்
சிசுக்கள் மட்டும் கொலையாவதேன்?
ஏற்றம் இறக்கம்
மனிதருக்குள் இருக்கலாம்
ஏழ்மைத் துயர் துடைக்க
கைகளேன் உயர்வதில்லை?
உறவுகளென்பது சங்கிலிதான் என்றால்
உதவுவதில் மட்டும்
தீவுகளாய் மாறுவதேன்?
இத்துணைக் கேள்விகளையும்
இழுத்துப்போர்த்திய அண்ணலார்
அச்சம் சூழ்ந்திருந்தார்...
ஞானத்தின் வாசலை அல் அமீனுக்காக
திறந்து வைத்திருந்தது
நான்குக்கு மூன்றடியே கொண்ட
பாறைசூழ் ஹீராவின் குகையை
ஜபல் அன்-நூர் எனும்
அந்த அழகு மலை.
- மு.முகமது பாட்சா*
15/11/2018
No comments:
Post a Comment