
இரவின் மேசைகள் நிரம்பி வழிய
ஒரு சிப் ஒயினுக்குள் ஓரங்க நாடகம்
அதிரும் இசைக்கு அரங்கம் துள்ள
அழகின் ஸ்பரிசம் அடர்வன மோட்சம்
ஆடைகள் குறைய
விரல்களின் தேடல் வினயத்தில் இதம்
பார்வைகளின் பசி மீறுதல்...
மகிழுந்தின் தாக்கோல்கள்
அடுத்தவர் கைமாற்றிக் களிப்பூட்ட
இரவின் மிருகங்கள் வெளிவருகின்றன...
விடியும் வரை வியர்வைக் குளியல்
விடிந்தபின்
இவர்கள்தான் இங்கு உத்தமர்கள்!
- மு.முகமது பாட்சா*
12 /11 /2018
No comments:
Post a Comment