Friday, 16 November 2018

உறவான மரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மரம், செடி, வெளிப்புறம் மற்றும் இயற்கை

அந்த மரத்திற்குத்தான் என்ன கரிசனம் 
அடிக்கடி மலர்களையும் தழைகளையும் 
சமாதியின் மீது 
இறைத்துக் கொண்டேயிருக்கிறது... 
கட்டியழுதவர்களும் ஒட்டிப் புரண்டவர்களும் 
காட்டிய கருணை கல்லறை மட்டும்தான்... 
தானாக வளர்ந்த மரம் 
வேராக என் உப்பைச் சுவைத்திருக்குமோ? 
ஒட்டிக் கிடக்கும் புற்களும், 
கொட்டிக் கிடக்கும் 
பழங்களைக் கொறிக்கும் அணில்களும்... 
பறவைகளும் மட்டும் இல்லையென்றால் 
நான் இன்னொருமுறை இறந்திருப்பேன்... 
உறவுகளே 
நீங்கள் உங்கள் உலகத்திலேயே வாழுங்கள் 
இந்த உலகம் கல்மிசமில்லாதது. 

- மு.முகமது பாட்சா* 
17 /11 /2018 

No comments:

Post a Comment

Popular Posts