அல் - அமீன் 12

(1 )
உண்மைகள் உறைந்து கிடந்தன
பொய்களின் கைகளில் தபசு மாலைகள்
ஏழைகளின் உதிரம்
கடவுள்களின் காணிக்கையானது...
சிலைகளுக்குள் சிலைகள் பிரசவித்து
சில்லறை தெய்வங்கள் பெருகின
பூசாரிகள் கடவுள்களாகிப் போனார்கள்...
காணிக்கைகள் சோம்பேறிகளின் கூடாரத்து
சுற்றுலாவாகிப் போனது...
தெய்வங்களின் சண்டைகளில்
சில்லறையாகச் சிதறினர் சிந்தனையாளர்கள்
அரபு தேசம் அழுக்கை பூசிக் கொண்டது
பகுத்தறிந்தவர்கள்
பள்ளத்தாக்குகளில் சிதைந்து கிடந்தார்கள்
காஃபா கண்ணீர் வடித்தது
காலத் தலைவனுக்குக் கேட்காமலா போகும்
காத்திருந்தது காலம்.
- நட்புடன்.....மு.முகமது பாட்சா*
10 /11 /2018

(1 )
உண்மைகள் உறைந்து கிடந்தன
பொய்களின் கைகளில் தபசு மாலைகள்
ஏழைகளின் உதிரம்
கடவுள்களின் காணிக்கையானது...
சிலைகளுக்குள் சிலைகள் பிரசவித்து
சில்லறை தெய்வங்கள் பெருகின
பூசாரிகள் கடவுள்களாகிப் போனார்கள்...
காணிக்கைகள் சோம்பேறிகளின் கூடாரத்து
சுற்றுலாவாகிப் போனது...
தெய்வங்களின் சண்டைகளில்
சில்லறையாகச் சிதறினர் சிந்தனையாளர்கள்
அரபு தேசம் அழுக்கை பூசிக் கொண்டது
பகுத்தறிந்தவர்கள்
பள்ளத்தாக்குகளில் சிதைந்து கிடந்தார்கள்
காஃபா கண்ணீர் வடித்தது
காலத் தலைவனுக்குக் கேட்காமலா போகும்
காத்திருந்தது காலம்.
- நட்புடன்.....மு.முகமது பாட்சா*
10 /11 /2018
No comments:
Post a Comment