Wednesday, 28 November 2018

ஆதிக்குள் நுழைந்தவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ஆதிக்குள் நுழைந்த அவன்
பழங்களை விற்றுக் கொண்டிருந்தான்
ஆராவாரமற்ற அடுக்குகளில்
வறுமை முகாந்திரமிட்டிருந்தது
கண்ணீரின் சுவை அப்போதும் உப்புதான்
கடனென்பது ஆதி சூத்திரம்
வலிகள் களிமண்ணோடு சேர்த்து 
குழைக்கப்பட்டிருக்குமோ?
ஆதிப்பிதா ஆதாமின் கண்ணீர்
ஏவாளிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சமனின் பக்கங்களில்
வறுமையின் கனம் மிகுதி
மதுவின் இரசமும் மயக்கப் போதைகளும்
ஏழைகளுக்கு வியர்வைத்துளிகள்
எத்துணை பக்கங்களில் எழுதினாலும்
எழுத்தின் சுவை மனசோடுதான்...
நம்பிக்கையென்பது
பிரார்த்தனைகளில் முடிந்துவிடுகிறது...
விற்காத பழங்கள் அழுகிப்போகலாம்
நிச்சயம் அஃது அவன் சுவைப்பதற்கல்ல.

- மு.முகமது பாட்சா*
29/11/2018

painting : Bartolomé Esteban Murillo


No comments:

Post a Comment

Popular Posts