
மண்ணை அகழ்ந்தவர்கள்
அவன் உடலை வெளியே எடுத்தார்கள்
நூற்றாண்டுகளின் கணக்கில்
அவன் வயதை அவர்களால் எட்டமுடியவில்லை
எத்தனையோ ஓளி ஆண்டுகளுக்குப் பின்னால்
ஒரு யுகம் கற்பனை என்பது கற்பனையென்று
குறிப்புகளின் முதல்வாசகம் பதிவானது
அவனருகில் இருந்தது காகம்தான் என்பது
தொல்லியலின் புள்ளியியல் வரையறை
ஈஸ்ட்டோ கரைசலில் அமிழ்ந்த கருங்காகன்
மூச்சுக்காற்றை நுரைகளால் நிரப்பி எழுந்தபோது
ஒரு பெரும் மூச்சின் சப்தம்
தரைகளின் பிளவிற்குள் ஊடுருவி
சன்னல்களின் கம்பிகளைப் பிய்த்தெறிந்தது....
அவன் இப்போது முனங்கிக் கொண்டிருந்தான்
உங்களின்
கடைசிப் பிரதிகள் நாங்கள்தானென்று.
- மு.முகமது பாட்சா*
27/11/2018
No comments:
Post a Comment