Thursday, 1 November 2018

ஒருமையா? பன்மையா?

தானியங்கு மாற்று உரை இல்லை.

நான் நிறையென்று சொல்லிக்கொண்டு 
குறைகளைத் 
தூக்கிக் கொண்டு நடக்கிறேன்... 
என்னைச் சுற்றிலும் 
குறைகள்தான் நிறைந்து கிடக்கின்றன... 
நான் என்பது 
ஒருமையா? பன்மையா? விளங்கவில்லை 
இலக்கணச் சுத்தம் 
இடறுகிறது வாழ்வியலில் 
எனக்குள் பன்மையை வைத்துக் கொண்டு 
ஒருமைதான் என்று வாதிடுகிறேன் 
பறவைகளின் 
படர்ந்த வானம் ஒருமையா? பன்மையா? 
நட்சத்திரங்கள் 
அங்குத்தானே பாய் விரித்து உறங்குகின்றன... 
தூறல்களைச் சேர்த்துக் கொண்டு 
விழுகின்ற மழை ஒருமையா? பன்மையா? 
விழுகிறவனெல்லாம் 
இறந்துதான் விட வேண்டுமென்றால் 
முட்டிக் கொள்பவர்களும் 
தாராளமாகப் போய் முட்டிக் கொள்ளுங்கள்... 
நீங்கள் மட்டும் சரியென்றால். 

- மு.முகமது பாட்சா* 
02 /11 /2018 

No comments:

Post a Comment

Popular Posts