
'நீரின்றமையா உலகம் போல'
நற்றினைப் பாடலொன்றை சுமந்து செல்கிறேன்
வற்றிய நதியொன்றில்
வாசல் வைத்திருக்கிறது குளிர்பான கடையொன்று
'முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மாமழை'
அமிலத்தில் அயர்ந்து விழ
சூள் கொண்ட இடிமட்டும் செவிப்பறையில் எப்போதும்!
'வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்' -
பட்டினப்பாலை
பரிதவிக்கும் விஞ்ஞானத்தில் பாழாய் போக
ஒட்டுத்துணி உழவனின் கட்டிலாம் கட்டாந்தரை
தினம் தினம் கண்ணீர் வடிக்கிறது...
இப்படிக்கு
மழைக்கு ஒதுங்கிய வானம்.
-மு.முகமது பாட்சா
10/11/2018
No comments:
Post a Comment