Sunday, 18 November 2018

அல் அமீன் 12 (8)

அல் அமீன் 12
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

(8)

சில்லறையெனச் சேர்ந்த கூட்டம் 
அடர் பெரும் மழையென ஆர்ப்பரித்தது... 
அபூலஹப்பின் ஆதிக்கச் சாபம் 
அளவில்லாமல் விழுந்து கொண்டிருக்க 
மறைவசனம் நேராக வந்தது, 
'அழியட்டும் அபூ லஹப்பின் இரு கரங்கள் 
அவனுமே அழியட்டும்' 
'அல்லாஹ் அஹத்' என்று முழங்கிய 
அடிமை பிலால் ரலியும் 
அபூலஹப்பின் சூதினால் அடிபட்டார்... 
சுடு மணலில் வறுபட்டார்... 
லாத் உஜ்ஜா மனாத்தை 
வணங்காதவர்கள் வதைபட்டார்கள் 
அபூ ஹூதைஃபா இப்னு முகீராவின் 
அடிமைகளில் 
தாயார்  சுமையா பின்த் கய்யாத்(ரலி) 
பிறப்புறுப்பினில் ஈட்டியைப் பாய்ச்சி 
உயிரையே சிதைத்தெடுத்து 
சிரித்து நின்றான் அபூலஹப்.. 
மறைகூட்டம் மனமேற்று கூடக்கூட 
பொய்க் கூட்டம் சிதறாமலிருக்க
வதைக் கூட்டமும் அங்குப் பெருகியது...
பாதுகாப்பவன் பத்திரம் செய்கிறான்
அவன் பழிகாரனல்ல...
'இறை இல்லம் விசாலமானது
ஹிஜ்ராவிற்கு இனி வழித்தேடுங்கள்!'
பறவைகள் 
இடம் மாறுவது இரையெடுக்கத்தான்
இயலாமையல்ல!
மாஷா அல்லாஹ் மனம் நிறைய!

- மு.முகமது பாட்சா*
18/11/2018 

No comments:

Post a Comment

Popular Posts