Monday, 26 November 2018

மதராஸி குரல்

மனிதம்பேசும் மதராஸி குரல்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

மன்ஸ்க்கு ரொம்பக் கஷ்டமாகீது நைனா
ஊடல்லாம் அட்ச்சிகின்னு போச்சாம்
மரம்மட்டல்லாம் சாஞ்சே போச்சாம்
மன்ஸ்க்கு ரொம்ப கஷ்டமாக்கீது நைனா..
காசிருந்தா குட்த்துதான் ஒதவலாம்
நாமலே கூவத்து சாவுக்கிராக்கி
நாய் கொலைச்சிதானா நாளு விடியப்போ(வு)து
மன்ஸ்க்கு ரொம்ப கஷ்டமாக்கீது நைனா
இந்த கஸ்மலாம் புடிச்ச கம்னாட்டிங்களை
இன்னான்னுதான் சொல்றது?
ஓட்டு மசுருன்னா ஓசாமாத்தான் தேயுறானுங்க
வூடு இடிஞ்சிபோச்சின்னா
வூட்ட வுட்டே வரமாட்டானுங்க...
மன்ஸ்க்கு ரொம்பக் கஷ்டமாகீது நைனா
தேங்கா மரம்லாம்கூட சாஞ்சி போச்சாம்மே
.......ங்க இதைகூடவா இவனுங்க கண்டுக்கல...
நாசமாய் போச்சி போ...
மன்ஸ்க்கு ரொம்பக் கஷ்டமாகீது நைனா
ராசாவாட்டாம் வாழ்ந்தவன்லாம் 
கூசாவ தூக்கீன்னு போய் சேந்துட்டான்.....
இவன்ங்க மட்டும் என்ன வா(ழ்)ந்துடப் போறானுங்க..
மன்ஸ்க்கு ரொம்பக் கஷ்டமாகீது நைனா

-மு. முகமது பாட்சா*
26/11/2018








No comments:

Post a Comment

Popular Posts