அல் - அமீன் 12

(3 )
ஷாம் நகரத்துச் சந்தை
சக்கரம் கட்டித்தான் சுழன்றது....
சீனத்துத் துணிகளும் சிங்களத்துக் கற்களும்
சிந்துவின் தானியங்கள்
சிங்காரத்து நறுமணங்கள்
ஒய்யார அடிமைகள் ஓராயிரம் குதிரைகள்
ஒட்டகங்கள் ஆடுகளென
ஒட்டு மொத்த தேசங்களும் ஓரணியில் திரண்டிட
பட்டுத்துணி வியாபாரி அபூதாலிப்பின்
அரவணைப்பில்
அண்ணல் முகம்மதுவும்...அழகு பூசி அங்கு நிற்க
ஓடிவந்த (துறவி)
பஹீரா பட்டு முத்தம் கொடுத்து, கட்டியணைத்து
வந்துவிட்டார் இறைத்தூதர் இவரென்றே
கட்டியம் கூறினார்
கண்மணி நாயகத்தின் சலாவத்து ஓதியே
முன் இறைவேதம் எடுத்துரைத்த
நிகழ்வுகளை ஒப்பிட்டு,
நாயகம் புஜத்தின் கீழிருக்கும் அடையாளம்
காண்பித்து அறுதியிட்டு அறிவித்தார்...
அப்போது அல் அமீன் வயது 12 .
- மு.முகமது பாட்சா*
12 /11 /2018

(3 )
ஷாம் நகரத்துச் சந்தை
சக்கரம் கட்டித்தான் சுழன்றது....
சீனத்துத் துணிகளும் சிங்களத்துக் கற்களும்
சிந்துவின் தானியங்கள்
சிங்காரத்து நறுமணங்கள்
ஒய்யார அடிமைகள் ஓராயிரம் குதிரைகள்
ஒட்டகங்கள் ஆடுகளென
ஒட்டு மொத்த தேசங்களும் ஓரணியில் திரண்டிட
பட்டுத்துணி வியாபாரி அபூதாலிப்பின்
அரவணைப்பில்
அண்ணல் முகம்மதுவும்...அழகு பூசி அங்கு நிற்க
ஓடிவந்த (துறவி)
பஹீரா பட்டு முத்தம் கொடுத்து, கட்டியணைத்து
வந்துவிட்டார் இறைத்தூதர் இவரென்றே
கட்டியம் கூறினார்
கண்மணி நாயகத்தின் சலாவத்து ஓதியே
முன் இறைவேதம் எடுத்துரைத்த
நிகழ்வுகளை ஒப்பிட்டு,
நாயகம் புஜத்தின் கீழிருக்கும் அடையாளம்
காண்பித்து அறுதியிட்டு அறிவித்தார்...
அப்போது அல் அமீன் வயது 12 .
- மு.முகமது பாட்சா*
12 /11 /2018
No comments:
Post a Comment