
விவாதித்தார்கள்
விவாதிக்கிறார்கள்
விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது
விவாதம்
சரியானது என்று சொன்னவர்கள்
விவாதத்தை விவாதத்தால் உரசிக் கொண்டிருக்க
விவாதத்தின் ஒரு முனையில் தீப்பிடிக்கிறது
விவாதிக்கிறவர்கள்
யாருக்காக விவாதித்தார்களோ
அவர்களின் மீதே
அதனை வீசியெறிகிறார்கள்....
எதற்காக விவாதித்தார்களோ அந்த விடயம்
கருகிக் போய்....இப்போது
புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது...
விவாதம் விவாதமாகப் புதுப்பித்துக் கொள்ள
கையேந்தி நின்றவனைப் பார்த்தவுடன்
கார் கண்ணாடியை ஏற்றிக் கொண்டான்
விவாதித்தவன்.
- மு. முகமது பாட்சா*
24 /11 /2018
No comments:
Post a Comment