Friday, 30 November 2018

அவன் கிங்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நான் அவனை எக்ஸ் என்கிறேன் 
நீ ஒய் என்கிறாய் 
தலையின் கிரீடம் கிங் என்கிறது 
அவன் விரலசைவிற்கு - உன் 
பியானோவின் கட்டைகள் நகர்கின்றன 
உன் எழுத்துகளைத் திருடி 
அவன் தன் வார்த்தைகளென்கிறான் 
கைகளை உயர்த்தும் போதெல்லாம் 
கடாட்சம் பெற்றுவிடுகிறாய் 
கண்களில் கருணை வழிவதாகச் சொல்லும் 
நேசத்தில் ஊஞ்சலாடுகிறான்... 
காட்சி மாற்றத்தில் 
கண்களைக் கட்டிவிட்டு ஏழையாகிறான் 
நீ உபகாரியாகிறாய்... 
அவன் போகும் பாதையெங்கும் - உன் 
தோட்டத்துப்பூக்கள் இரைந்துகிடக்கின்றன 
அந்தப்புரத்தில் தன் வேசம் கலைப்பவன் 
அத்தர் பன்னீரில் குளிக்கிறான் 
அடுத்த வேளை உணவுக்காக - நீ 
ஓடிக் கொண்டேயிருக்கிறாய் 
அவனை நான் எக்ஸ் என்கிறேன் 
நீயோ ஒய் என்கிறாய் 
தலையின் கிரீடம் கிங் என்கிறது 

- மு.முகமது பாட்சா* 
30/11/2018 

No comments:

Post a Comment

Popular Posts