என்னை தேடும் அவன்

என்னைத்
தேடிக் கொண்டிருப்பதாக
என்னிடமே அவன் சொன்னான்!
ஆச்சரியமாக இருந்தது...
அவன் நான்தான் என்று சொல்லியும்
நம்பவில்லை...
நான் இப்போது இருப்பதுபோல்
அவன் தேடும் நான்
எப்போதும் இருந்ததில்லையாம்!
அதனால் நான் அவனில்லையென்று
அடித்துச் சொல்கிறான்...
எனக்குள் இப்போது
சந்தேகம் மெல்ல எழுகிறது....
உண்மையில்
நான் நானில்லையா என்று....
ஆடும் நீரலையில் பிம்பமாகக் கலைகிறேன்
இப்போது அவன் என்னைப் போலவே
நின்று கொண்டிருக்கிறான்
அவன் யாரென்று
இதுவரைக்கும் சொல்லவில்லை
நானும் அவனிடம் கேட்கவில்லை!
மு.முகமது பாட்சா*
17 /11 /2018

என்னைத்
தேடிக் கொண்டிருப்பதாக
என்னிடமே அவன் சொன்னான்!
ஆச்சரியமாக இருந்தது...
அவன் நான்தான் என்று சொல்லியும்
நம்பவில்லை...
நான் இப்போது இருப்பதுபோல்
அவன் தேடும் நான்
எப்போதும் இருந்ததில்லையாம்!
அதனால் நான் அவனில்லையென்று
அடித்துச் சொல்கிறான்...
எனக்குள் இப்போது
சந்தேகம் மெல்ல எழுகிறது....
உண்மையில்
நான் நானில்லையா என்று....
ஆடும் நீரலையில் பிம்பமாகக் கலைகிறேன்
இப்போது அவன் என்னைப் போலவே
நின்று கொண்டிருக்கிறான்
அவன் யாரென்று
இதுவரைக்கும் சொல்லவில்லை
நானும் அவனிடம் கேட்கவில்லை!
மு.முகமது பாட்சா*
17 /11 /2018
No comments:
Post a Comment