Saturday, 24 November 2018

கண்ணீர் கருணை

தானியங்கு மாற்று உரை இல்லை.

கும்பிடும் போது 
ஒரு சொட்டுக் கண்ணீரை 
காணிக்கையாகக் கொடுங்கள் 
உங்கள் உண்டியல்களை உடைத்து 
அழுகின்ற டெல்டாவிற்கு 
அன்னமாகத் தாருங்கள்... 
மசூதிகளின் தொழுகைகளில் 
அவர்களுக்கும் கையேந்துங்கள் 
தருமத்தின் வரியை அன்னவயலுக்கு 
ஆகாரமாகக் கொடுங்கள் 
சர்ச்சுகளின் மெழுகு வர்த்திகள் 
பிரார்த்திக்கட்டும் அவர்களுக்காக 
தேவனின் கருணை 
ஏழைகளுக்கானதும்தானே! 
சேதங்கள் விளைவதும் கூட  இறைவன் 
கருணை மழையை 
கண்காணிப்பதற்காக இருக்கலாம்... 
சேர்த்து வைத்தவற்றை 
இழந்தவர்கள்தான் கேட்கிறார்கள்... 
சேர்ப்பதெல்லாம் 
நிலைப்பதில்லையென்று... 

-மு. முகமது பாட்சா* 
25 /11 /2018 

No comments:

Post a Comment

Popular Posts