
அவள்
அவளையே தேடிக் கொண்டிருந்தாள்
அவனோடுதான் அவள்
ஓடியிருக்கவேண்டும் என்பது
அவளது அசையாத நம்பிக்கை...
எப்படியிருப்பாள்? என்று கேட்டவர்களுக்கு
தன்னை மாதிரி இருக்கமாட்டாள்
என்று மட்டும் அடையாளப்படுத்தினாள்...
அவ்வப்போது அழுதவள்
அவளை
அவளின் குடும்பம் கொன்றிருக்கலாம்
என்று பிராதும் வைத்தாள்..
அவன் எங்கிருப்பான்?
தன் பால்யத்திற்கே ஓடியிருப்பான் என்றவள்
நீங்கள் எந்தச் சாதி? என்று கேட்டுவிட்டு
என்னைக் கொன்றுவிடுங்கள்
அவனும் கூட இறந்துவிடுவான் என
ஆத்திரம் கூட்டினாள்....
அவள் எங்குமே கிடைக்காவிட்டால்?
என்னைக் கொன்று
அவளைத்தேடுவேன் என அதிர்ச்சியூட்டியவள்
ஓடிக்கொண்டேயிருந்தாள்
சற்றுமுன்தான் ஆயுதங்களுடன் சிலர்
அவளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள்
இனி இரத்தத்துளிகளில் அவள்
எங்காவது நிச்சயம் உறைந்துவிடுவாள்.
- மு.முகமது பாட்சா*
30/11/2018
No comments:
Post a Comment