
கடல் என்பதை
கட்டுமரத்தால் எழுதும் மீனவன்
மீன்களை
அலையென்று பிடித்து வருகிறான்
ஆகாசம் என்பதை
பறவைகள்தான் எழுதி வைக்கின்றன
வனம் என்பதை
யானையின் சாணியும் உணர்த்தும்
எழுதுகோல் தேவையில்லை
இயற்கை
தன் கவிதைகளை எழுதி வைக்க...
மழையென்பது
வானத்திற்குப் பூமி கொடுத்த வரம்
சிற்றுயிர்களின் சப்தமின்றிப் போனால்
சகலமும் செத்துவிடும்...
சங்கீதம் யாரும்
அவற்றிற்குக் கற்றுக் கொடுத்ததில்லை..
சாகாவரத்தின் மண்
நம்மைப் பற்றிக் கவிதை எழுதுகிறது...
படிக்காமல்
நாமதனை கசக்கி எறிகிறோம் ...
படித்தவர்களென்று
நம்மை நாமே சொல்லிக் கொண்டு
- மு.முகமது பாட்சா*
22 /11 /2018
No comments:
Post a Comment