Monday, 12 November 2018

நுதல் உப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள்

வார்த்தைகளை வசமாக்கி வம்படிக்கி 
சண்டை செய்கிறாய் 
இறும்பை இடையில் வளர்த்து 
இன்சொல்லை பதுக்கிக் கொள்கிறாய் 
கரும்பின் அருகில் 
கட்டிய காளையாகத் துள்ளுகிறேன் 
சிறாம்பு பார்வையாலே 
காதல் இதயத்தை ஏன் சிராய்க்கிறாய்? 
தள்ளிய 
படுக்கையில் அள்ளி அணைக்கிறேன் 
மெல்லிய முத்தம் கொண்டு 
ஊடலையும்தான் நீ முடிக்கிறாய்... 
கள்ளி உன் களவு தெரியாத என்ன? 
காய்ந்த மாட்டைக் கம்பம் கொல்லையில் விட்டு 
காய்ச்சலைத்தான் முடிக்கிறாய் 
உன் சுட்டி நுதலில் 
முத்து கோர்க்கும் உப்பை ருசிக்கிறேன் 
எத்துணை ருசியடி? 
இனியும் 
ஒரு கூடலுக்கு ஊடல் செய்வோம் வா! 

குறள் - 1328 

'ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் 
கூடலில் தோன்றிய உப்பு' 

- மு.முகமது பாட்சா* 
13 /11 /2018 

No comments:

Post a Comment

Popular Posts