Sunday, 25 November 2018

தேனெடுப்பவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

சலனமற்ற குளத்தில் மூழ்கிக்கிடக்கிறது 
ஆழிப்பேரலைகளின் பெரும் சப்தங்கள் 
உறங்கும் நிலாவிற்குத் தெரியுமா என் காதல்? 

யாரைத் தேடிக் கொண்டிருக்கிறது நிலா 
நட்சத்திரங்களெல்லாம் காத்துக் கிடக்கின்றன 
எனக்கு உன் வெளிச்சம் மட்டும் போதும்! 

வெளிச்சத்தைத் தேடுகின்ற வேர்களுக்கு 
பூக்களைப் பற்றிய கவலைகள் கிடையாது 
இந்த வண்டுக்கும் தேனிருக்குமா? 

தேனெடுத்தவன் தேடிக் கொண்டிருக்கிறேன் 
ஆழியின் பெரும் சப்தம் அருகில் கேட்கிறது 
சருகுகள்  உதிர்வதை யார் ரசிப்பார்? 

- மு.முகமது பாட்சா* 
25/11/2018 

No comments:

Post a Comment

Popular Posts