Friday, 16 November 2018

கடலோடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், மேகம், வானம், சமுத்திரம், தண்ணீர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

காற்றைச் சுமந்துகொண்டு 
அலையின் மீது சவாரி செய்கிறது கடல் 
- ஆகாயம் 
கண்களைக் கட்டிக் கொண்டது! 

கவிதையொன்று 
என்னை எழுதிக் கொண்டிருக்கிறது 
நான் கடலோடு 
விளையாடிக் கொண்டிருக்கிறேன்! 

மரங்கள் சப்தமிட்டு அழுகின்றன... 
பறவைகளின் கூடுகளை 
கடல் தின்றுவிட்டது! 

உடைந்துபோன படகில் 
கடலைத் தேடுகிறான் மீனவன் 
அறுந்துபோன வலையில் 
உதிர்ந்து விழுகின்றன அலைகள்! 

கடலை எல்லோரும் 
தேடிக் கொண்tடேயிருக்கிறார்கள்... 
அஃது அமைதியாக மீன்களோடுதான் 
விளையாடிக் கொண்டிருக்கிறது! 

- மு.முகமது பாட்சா* 
16 /11 /2018

No comments:

Post a Comment

Popular Posts