Wednesday, 14 November 2018

சூறாவளி வானம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

வானம் அமைதியின்றி இருக்கிறது 
வாகனங்கள் தங்கள் போக்கை 
மாற்றிக் கொள்ளவில்லை 
எங்கிருந்தோ வரும் 
இசை வெளிச்சம் இதமூட்ட என்னை 
அறையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
சற்றுமுன் வீசிய சூறாவளி 
தூக்கிச் சென்றிருக்கலாம் 
என்பது அவர்களின் கணிப்பு 
நான் பெரும் மழையென்று 
ஒருதடவை சொல்லியிருந்தேன் 
அவர்கள் அதனை நம்பவில்லை... 
சிறு தூறல்தானென்று 
எள்ளி விட்டு நகர்ந்தார்கள் 
பெரும் சப்தமொன்று காத்திருக்கிறது 
அறையை முற்றுகையிட்டு 
முடியாத கதையை முடித்துவைக்க....

பறவைகளின் வானம் அப்போது 
தன் தலையை 
நிச்சயம் துடைத்துக் கொள்ளும்.

- மு.முகமது பாட்சா* 
15 /11 /2018

No comments:

Post a Comment

Popular Posts