
நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில்
ஏழாம் பக்கத்தை மட்டும் காணவில்லை
கதை அங்கிருந்து நகரவே மறுக்கிறது...
முதல் பக்கத்தில் முத்தத்தோடு வரவேற்றவள்
ஆறாம் பக்கத்தோடு மட்டுமே நிற்கிறாள்
9ம் பக்கத்திலிருந்து தேடிப்பார்த்தும்
அவள் கிடைக்கவேயில்லை
13ம் பக்கத்திலுள்ள கல்லறையருகில்
அவன் கைக் கட்டி நிற்கிறான்...
அவளுடையதாக இருக்குமா என்பது சந்தேகம்!
66ம் பக்கத்தில்
தோழி தான் பார்த்ததாகச் சொல்கிறாள்...
ஆனாலும் 82ம் பக்கத்தில்
படத்தருகே தந்தை அழுது கொண்டிருக்கிறார்...
7 ம் பக்கத்தைக் கேட்டு விண்ணப்பிக்கிறேன்
அதைத்தான் அவர்களும் தேடிக் கொண்டிருப்பதாக
தகவல் வருகிறது...
என்னருகே யாரோ கடந்து போகிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
04 /11 /2018
No comments:
Post a Comment