Friday, 1 June 2018

நூலாம்படை வீடு

ரமலான் 16
தானியங்கு மாற்று உரை இல்லை.

நூலாம்படைப் போலொரு வீடு 
அதில் ஆசைக்கு எத்தனைத் தீனி?

வாளால் சாயுமொரு தேகம் 
வாசல்கள் அத்தினையும் மோகம்

ஏலம் போன்றதொரு வாசம் 
செத்த பிணத்தின்மீதா வீசும்?

பாவம் கழன்றிட மறை நோன்பு 
பாலம் அமைத்திட கையேந்து

காதலென்பதுஉம் கருணை 
அதைக் காட்டாதவன் கை வெறுமை

ஊனமென்பதும் குறை மனமே 
குணம் கூடி நின்றால் நிறை தருமே

ஏகன் திருமறை வசனம் 
தினம் ஓதிப்பார் உண்மை விளங்கும்

- மு.முகமது பாட்சா*
01 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts