ரமலான் 23

ரூமிக்கும்
புல்லாங்குழலுக்குமானத் தொடர்புபோல்
கவிதை நீள்கிறது
இசையைச் சுமந்து செல்லும் காற்றை
யாரும் சிந்திப்பதில்லை
வார்த்தைகளின்
ஏற்ற இறக்கங்களின் இரகசியம்
யார் அறிவார்?
முத்துக்களால் மகுடமிருந்தாலும்
கழுவினால் மட்டுமே
உடல் தூய்மையாகும்...
சிறகுகளென்பது கற்பனையே
பறப்பதுபோல்
நாம்தாம் பாவனைச் செய்கிறோம்
சருகுகள் பறப்பதற்கும்
காற்றுதான் உயிர் கொடுக்கிறது....
உயிரென்பதும் ஒரு சருகுதானே!
ஏழைகளின் பசியென்பது வள்ளல்களுக்கு
இறைவன் போட்ட பிச்சை
கஞ்சனெப்போதும்
பெரும் கனத்துடனே திரிகின்றான்
அகத்தின் அழுக்குதான் ஆறாத வீச்சம்
ரூமிக்கும்
புல்லாங்குழலுக்குமானத் தொடர்புபோல்
கவிதை நீள்கிறது
வார்த்தைகளின்
ஏற்ற இறக்கங்களின் இரகசியம்
யார் அறிவார்?
- மு.முகமது பாட்சா*
08 /06 /2018

ரூமிக்கும்
புல்லாங்குழலுக்குமானத் தொடர்புபோல்
கவிதை நீள்கிறது
இசையைச் சுமந்து செல்லும் காற்றை
யாரும் சிந்திப்பதில்லை
வார்த்தைகளின்
ஏற்ற இறக்கங்களின் இரகசியம்
யார் அறிவார்?
முத்துக்களால் மகுடமிருந்தாலும்
கழுவினால் மட்டுமே
உடல் தூய்மையாகும்...
சிறகுகளென்பது கற்பனையே
பறப்பதுபோல்
நாம்தாம் பாவனைச் செய்கிறோம்
சருகுகள் பறப்பதற்கும்
காற்றுதான் உயிர் கொடுக்கிறது....
உயிரென்பதும் ஒரு சருகுதானே!
ஏழைகளின் பசியென்பது வள்ளல்களுக்கு
இறைவன் போட்ட பிச்சை
கஞ்சனெப்போதும்
பெரும் கனத்துடனே திரிகின்றான்
அகத்தின் அழுக்குதான் ஆறாத வீச்சம்
ரூமிக்கும்
புல்லாங்குழலுக்குமானத் தொடர்புபோல்
கவிதை நீள்கிறது
வார்த்தைகளின்
ஏற்ற இறக்கங்களின் இரகசியம்
யார் அறிவார்?
- மு.முகமது பாட்சா*
08 /06 /2018
No comments:
Post a Comment