
மொழிதலில்
ஒரு வார்த்தை பிசிரென்றறிந்து
பிழைத் திருத்துகிறாய்...
மூடிய கண்களுக்குள்
நித்திரை இருக்க வேண்டிய அவசியமில்லை
நினைவுகளை நுழைக்கிறாய்
பாடலொன்றில்
பத்துக் குறிப்புகள் உட்கார்ந்திருக்கின்றன
பழரசமருந்தும் கண்களில்
வார்த்தைகள் இரைந்து கிடக்க
அலைகளுக்கு ஆற்றலில்லை
அவற்றைக் கொண்டுசெல்ல
எழுதாத புத்தகத்தைப் பரிமாறிக் கொண்டது
இதயம் மட்டும்தான்
எழுத்துகளுக்கு எப்படித் தெரியும்?
நன்றாகவே மூச்சையிழுத்துவிடு
கனம் என்பது
வார்த்தைகளின் மூச்சாகக்கூட இருக்கும்.
-மு. முகமது பாட்சா*
06 /06 /2018
No comments:
Post a Comment