Monday, 4 June 2018

நன்மையின் பக்கம்

ரமலான் 19 


நன்மையின் பக்கமே 
நகர்ந்து செல்லுங்கள் 
இரு புறமும் சூது கவ்வும் வேலி 

ஆசைகள் ஒப்பனைப் பூசிய சூனியம் 

நிதானம் சற்றுக் கடினம்தான் 

நிழல் 
இறப்பிற்குப் பின் கிடையாது 

இறந்தவர்கள் யாரும் 
நிரந்தரத்தை 
நிரந்தரமாக வைத்ததில்லை 

பருகும் போது 'பாவம்' பழ இரசம் 
பருகி முடித்ததும் கடும் விஷம் 

நன்மையின் பக்கமே 
நகர்ந்து செல்லுங்கள் 
இரு புறமும் சூது கவ்வும் வேலி 

அழகிய முன் மாதிரியை 
புத்தக அடுக்கில் வைத்துவிட்டு 
ஆகாசத்தில் தேடுகிறோம் 
அடுக்குமாடிகளை 

நோன்பின் கரங்கள் நீளமானது 
ஜக்காத்தை கொண்டே 
அழகு செய்யுங்கள் 

புன்னகையை அணிந்து கொள்வது 
அத்தினையொன்றும் சிரமமில்லை... 

ஈமானில்லாத ஈகை என்றுமே 
ஈனத்தில் விழுந்த பேரீட்சை 

தொழுகை மட்டுமே 
இங்குத் தொடர்பின் சங்கிலி 

நன்மையின் பக்கமே 
நகர்ந்து செல்லுங்கள் 
இரு புறமும் சூது கவ்வும் வேலி 

- மு.முகமது பாட்சா* 
04 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts