ரமலான் 24

புனித ரமலானின் இரவுகள்
கண் கலங்குகின்றன
இனிய இம் மாதத்தைக் கடத்துவதற்காக
முசல்லாக்கள் பரிதவிப்போடு பார்க்கும்
இனியும் தொழ வாருங்கள்
பசியருந்தியப் பானைகளும் கிண்ணங்களும்
ஒரு மூலைக்குள் போய் முடங்கிவிடும்
எத்துணைப் பிறை வந்தாலும்
நோன்புப் பிறைபோன்று ஒரு பிறை ஆகிடுமா?
சங்கைமிகுப் பள்ளிவாசல்கள்
இனி ஐந்து வேளை மட்டுமே ஆர்ப்பரிக்கும்
கைகளும் மனமும் ஒருசேரக் கலங்கி நிற்கும்
இனியும் இதற்கு வேலை வருமா?
தராவிஹ் தொழுகையின் சங்கைமிகு துஆக்கள்
சாந்தத்துடன் விடைபெறும்
அல்லாவின் கருணை அடர்த்தியானது
விட்டு விடாதீர்கள் தொழுகையும் ஈகையும்
இனிதான் இப்லீஷ்
தன் அருவெறுப்பான புன்னகையை
ஆடம்பரமாக விரிப்பான்.
- மு.முகமது பாட்சா*
09 /06 /2018

புனித ரமலானின் இரவுகள்
கண் கலங்குகின்றன
இனிய இம் மாதத்தைக் கடத்துவதற்காக
முசல்லாக்கள் பரிதவிப்போடு பார்க்கும்
இனியும் தொழ வாருங்கள்
பசியருந்தியப் பானைகளும் கிண்ணங்களும்
ஒரு மூலைக்குள் போய் முடங்கிவிடும்
எத்துணைப் பிறை வந்தாலும்
நோன்புப் பிறைபோன்று ஒரு பிறை ஆகிடுமா?
சங்கைமிகுப் பள்ளிவாசல்கள்
இனி ஐந்து வேளை மட்டுமே ஆர்ப்பரிக்கும்
கைகளும் மனமும் ஒருசேரக் கலங்கி நிற்கும்
இனியும் இதற்கு வேலை வருமா?
தராவிஹ் தொழுகையின் சங்கைமிகு துஆக்கள்
சாந்தத்துடன் விடைபெறும்
அல்லாவின் கருணை அடர்த்தியானது
விட்டு விடாதீர்கள் தொழுகையும் ஈகையும்
இனிதான் இப்லீஷ்
தன் அருவெறுப்பான புன்னகையை
ஆடம்பரமாக விரிப்பான்.
- மு.முகமது பாட்சா*
09 /06 /2018
No comments:
Post a Comment