
ஒரு சொல் மரமாகி வளர்கிறது
அதன் கிளைகளில்
உட்கார்ந்து கொள்கிறேன்
சொல் பொறுக்கும் கிளியொன்று
சொக்கட்டானாட அழைக்க...
கட்டைகளைக் காய்களில் செதுக்கி
உருட்டுகிறோம் ...
தாயம் விழுந்தால்
விழுங்கிவிடுவதாக ஒப்பந்தம்
விழாத தாயத்திற்கு
ஒரு கதை சொல்ல வேண்டும்
சொல்லிய கதைகளை
இலைகளில் எழுதிப் பறக்கவிடுகிறோம்
சொல்லாத கதைக்காக
ஓர் இலை மட்டும் மிச்சமிருக்க
தாயம் விழுந்ததது கிளிக்குத்தான்
கிளி விழுங்கிய கதையை
அந்த இலை ஏந்திக் கொண்டு பறக்கலாம்
அந்த மரம் செடியாகி
இப்போது பூக்களைச் சொரிகிறது.
- மு.முகமது பாட்சா*
08 /06 /2018
No comments:
Post a Comment