Friday, 8 June 2018

மன்னிப்பவன்

ரமலான் 22
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

பெரும் மழையின் சப்தங்கள் 
ஒதுங்கிக் கொண்டன
குளிர்ந்த காற்று செயற்கை பெட்டியில்
பசுமைக் காணாத கண்கள்
குருடென்றே சொல்லிக் கொள்ளலாம்
நிழல்கள் நிழலுக்காக அலையும் வேதனை
பறவைகளின் சப்தங்கள்
இசைக்கும் கருவிகளில் மட்டும்
இலக்குகளில்லாமல் மனிதர்கள்
எதை நோக்கிச் செல்கின்றோம்?
விடிவதும் விடியல் பின் மடிவதும் 
வாடிக்கையாகிவிட்டது
வேடிக்கையில் மனம் இலயித்துக்கிடக்க
வேதனையை எப்போது சிந்திப்பீர்?
வழித்தவறியது ஆடுகள் மட்டுமா?
வயிற்றிலுள்ள குட்டிகளும்தான்...
ஈகையை இழந்த பின் சுயநலம் 
சப்பரம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது
புன்னகையை மறந்துவிட்டு
புத்தாடைகளால் எப்படி ஜொலிக்க முடியும்?
முஸாபா செய்யாத கைகளை
ஆண்டவன் முத்திரை வைத்து விடுகிறான்
நோன்பின் இருபதும் நகர்ந்துவிட்டது
நோவினை அகன்றிட தர்மம் செய்யுங்கள்
மன்னிப்பவன் காத்திருக்கிறான்.

- மு.முகமது பாட்சா*
07 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts