எழுதாத வானத்தில் எழுதவரும் நிலா
கைத்தட்டும்
நட்சத்திரங்கள்!
-------------
பதுங்கிக் கிடக்கிறது உடல்
பாய்ச்சலுக்கு
தயாராகிவிட்டது மனம்
----------------
அழகின் பொதுமைக்குள்
இயற்கை உறங்குகிறது
அதிகம் பீற்றிக்கொள்ளாதே
-----------------
யாரைத் தேடுகிறாய் நிலா
அவள்
கவிதைக்குள் உறங்குகிறாள்
--------------
செடிகளை மேய்ந்துவிட்ட ஆடுகள்
நீரைத்தேடிப் பயணிக்கும் வேர்கள்
----------------
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment