Friday, 8 June 2018

தொடுப்பு

ஞானம் கிடைத்த ஞமலியொன்றுத் 
திரும்பிப் பார்த்துப் போகிறது 
சிதறிய எலும்புத் துண்டங்கள்

- முகமமது பாட்சா -

அம்மாவிடம்
நானெழுதியக் கவிதையொன்றை 
காட்டுகிறேன்...
அவளும்.... 
தானெழுதியக் கவிதையென்று 
என்னைக் காட்டுகிறாள்

- முகமது பாட்சா -

ஆட்சிக் கட்டில் ஆடுகிறதாம்
கீழே விழுந்து பிடித்துக் கொள்கிறார்கள்
காலில் விழவில்லை

- முகமது பாட்சா -

No comments:

Post a Comment

Popular Posts