Monday, 4 June 2018

பிரமாண்ட வீடு

ரமலான் 18
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

பிரமாண்டமென்பது என்ன?

மண்ணறையை விட ஒரு பிரமாண்டம் 
இருக்கவாப் போகிறது?

நாம் கண்மூடி நுழையும் 
கருவறையல்லவா அது

சந்தூக்கின் பல்லாக்கு , கலிமாவின் ஷகாதத்து, 
துஆக்களின் பூச்சொரிவு நுழையும் 
பிரமாண்ட வீடல்லவா

இறுதித் தீர்ப்பிற்கான 
இடைவெளியின் தூக்கம் 
இங்குத்தானே நடைபெறுகிறது

அழுக்குகளைக் கழுவிட்டு 
அழகாக உறங்கும் இடமல்லவா!

நன்மையை மட்டுமே கொண்டு செல்லும் 
நாற்செவ்வக வீடு

சந்ததிகளின் சங்கிலி 
அழுகைகளில் கரைந்து விட்டது

சேர்த்து வைத்த ஆசைகள் 
பாவங்களாய் 
பூமியில்தான் மிச்சம் இருக்கின்றன

எதையும் கொண்டு போகப் போவதில்லை

கபன் துணியும் 
கஸ்தூரியின் மணமும் மட்டும் போதும்

ஜனஸாவின் தொழுகை 
கபரை சூழ்ந்து நின்று வாசம் வீசும்

இத்தினை வாசம் 
பூமியில் எங்குதான் கிடைக்கும்?

மண்ணறையை விட ஒரு பிரமாண்டம் 
இருக்கவாப் போகிறது!

- மு.முகமது பாட்சா* 
03 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts