வேதாளத்தின் விக்கிரமன்

ஓர் ஊரில் ஓர் இராசா இருந்தார்
ஒரு மந்திரியிருந்தார்
ஒரு நாவிதர் இருந்தார்
இராசாவின் கதவு தட்டப்பட்டது
நாடோடி நின்று கொண்டிருந்தான்
சாப்பாடு கேட்டவனுக்கு
செல்பி எடுத்து சகலமும் செய்தார்
சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு
சகலத்தை விட்டுச் சென்றான்
மந்திரி வீட்டுக் கதவு தட்டப்பட்டது
நாடோடி நின்று கொண்டிருந்தான்
சாப்பாடு போட்டு
செல்பி எடுத்துக் கொண்டான்
செல்பியில் மந்திரி சரியாக விழவில்லை
நாவிதன் சாப்பாடு போட்டு
செல்பி எடுத்துக் கொண்டான்
இராணியின் அறைக்கதவு தட்டப்படது
இராசா நின்று கொண்டிருந்தார்
நாடோடி
சேலையை மடித்துக் கொண்டிருந்தான்
மந்திரியும் நாவிதனும் கூட
அங்குதான் மறைந்திருந்தார்கள்
இராசவை மட்டும் விட்டுவிட்டு
இராணி செல்பி எடுத்துக் கொண்டால்
செல்பியில் நாடோடி மட்டுமே
நின்று கொண்டிருந்தான்.
பிரமை கவிதைக்கு விடைத்தெரியாத
விக்கிரமன் முருக்கை மரத்திலேறிக்கொள்ள
வேதாளம் அடுத்தக் கவிதையை
அவனிடம் சொல்ல மெல்ல நெருங்கியது..
- மு.முகமது பாட்சா*
04 /06 /2018

ஓர் ஊரில் ஓர் இராசா இருந்தார்
ஒரு மந்திரியிருந்தார்
ஒரு நாவிதர் இருந்தார்
இராசாவின் கதவு தட்டப்பட்டது
நாடோடி நின்று கொண்டிருந்தான்
சாப்பாடு கேட்டவனுக்கு
செல்பி எடுத்து சகலமும் செய்தார்
சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு
சகலத்தை விட்டுச் சென்றான்
மந்திரி வீட்டுக் கதவு தட்டப்பட்டது
நாடோடி நின்று கொண்டிருந்தான்
சாப்பாடு போட்டு
செல்பி எடுத்துக் கொண்டான்
செல்பியில் மந்திரி சரியாக விழவில்லை
நாவிதன் சாப்பாடு போட்டு
செல்பி எடுத்துக் கொண்டான்
இராணியின் அறைக்கதவு தட்டப்படது
இராசா நின்று கொண்டிருந்தார்
நாடோடி
சேலையை மடித்துக் கொண்டிருந்தான்
மந்திரியும் நாவிதனும் கூட
அங்குதான் மறைந்திருந்தார்கள்
இராசவை மட்டும் விட்டுவிட்டு
இராணி செல்பி எடுத்துக் கொண்டால்
செல்பியில் நாடோடி மட்டுமே
நின்று கொண்டிருந்தான்.
பிரமை கவிதைக்கு விடைத்தெரியாத
விக்கிரமன் முருக்கை மரத்திலேறிக்கொள்ள
வேதாளம் அடுத்தக் கவிதையை
அவனிடம் சொல்ல மெல்ல நெருங்கியது..
- மு.முகமது பாட்சா*
04 /06 /2018
No comments:
Post a Comment