
இலையுதிர்த்த மரத்தின் வேர்களில்
நீரோட்டத்தேம்பல்
பறவைகளின் உரையாடல் கூடுகளைப் பற்றி
பதுங்கலுக்கு மரம்போதும் சர்பத்திற்கு
வண்டுகள் மண் குழைவோடலைகின்றன
சிலந்தியின் வலை சீரிய முயற்சி
குகைகளைத்
தகர்த்துவிட்டால் புலிகளெங்கே உறங்கும்?
யானைகளின் காடு எலிகளுக்கும் வீடு
தாவித் திரிந்தால்தான் குரங்கு
நீரோட்டம் உயிரிகளின் நரம்பு
செறிவென்பது மழைக்கூட்ட மேகங்கள்
மரங்கள் மட்டும்தான் மா மனிதனின் காற்று
எந்திரங்கள் எடுபிடிகள்
அதன் கழிவுகள் சுவாசத்தின் எதிரிகள்
பயணமென்பது சுவாரசியம் கூடியது
சுகமாக அமைந்து விட்டால் சோம்பலானது
விளை நிலங்கள் மனிதனின் தெம்பு
கிராமத்தின் வீடுகள் நகரத்தின் மாளிகைகள்
எதையிடித்து எதை மாற்றப்போகிறோம்
நாம் கடற்சூழுலகத்தின் காட்சி பொருட்கள் .
- மு.முகமது பாட்சா*
24 /06 /2018
No comments:
Post a Comment