
யார் நீங்க?
மோசனமான கேள்வியல்ல
எதைக் கொண்டு வந்தாய்?
எதைக் கொண்டு போகப் போகிறாய்?
பகவத் கீதையில் கேட்ட கேள்வி
கேள்விகள் கேட்காமல்
தேர்வுகள் நடப்பதில்லை
நீயுமா புருட்டஸ்? என்ற கேள்வி
ஆச்சரியக்குறியானது சீசரின் வியப்பில்
ஏலீ! ஏலீ ! என்னை ஏன் கைவிட்டீர்?
என்பதே ஏசுவின் கடைசிக் கேள்வி
கடவுள் என்பவன் யார்?
சாக்ரட்டீஸின் கேள்வி சுற்றி வருகிறது
ஏன்? எதற்கு ? எப்படி? என்ற கேள்விகளில்
விடைத்தெரியாத ஆச்சரியங்கள்
இருக்கின்றன
நான் யார் ? என்ற கேள்வியை
யாரும் இறக்கி வைக்கவில்லை
கேள்விகளைக் கண்டு பயந்து ஓடுகிறவன்
ஆட்சிக்காக அரிதாரம் பூசுகிறவன்
கேள்விகள் எப்போதும் இறப்பதில்லை
அஃது இறந்துவிட்டால்
பதில்கள் முடமாகி மடிந்துவிடும்.
- மு.முகமது பாட்சா*
01 /06 /2018
No comments:
Post a Comment