Tuesday, 5 June 2018

ஆதாரங்கள்

ரமலான் 20
தானியங்கு மாற்று உரை இல்லை.

நம்ரூதுவின் மரணம் 
அற்பக் கொசுவால் நிகழ்ந்து விடுகிறது 

பிர் அவுனின் சடலத்தை 
மண்ணறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை 

ஆது சமூகத்தின் வீழ்ச்சி 
சூறாவளிக் காற்றில் சுழன்றழிந்தது 

அபு லகப்பின் கைகள் 
ஆதாரத்துடனே துண்டிக்கப்பட்டன 

துரோகங்களின் மாளிகைகள் 
எப்போதும் வானளாவியே நிற்கின்றன 

மண்மேடாவதற்கு 
இங்கு மண்புழுக்கள் மட்டுமே போதும் 

கடவுள் என்று சொல்லிக்கொண்ட யாரும் 
கடவுளாக வாழ்ந்ததேயில்லை 

நைனுவா மக்களின் மீட்சிமை 
நபி யூனூஸின் சாபத்தை மழையாக்கியது 

ஆதாரங்கள் அதிகம் இருக்கின்றன 
அழுக்கைக் கழுவி கொள்ளுங்கள் 

மன்னிப்பின் மகிமை 
அவனிடத்தில் மட்டுமே இருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
05 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts