கூர் சரளைக் கற்கள் உள்ளங்கால்வழி
இதயம் குத்த தண்டவாளப் புதர்தேடியமர்ந்தேன்..
காலில் குத்திய காய்முள்கூம்புகள்
பாவாடைகளில் பதியனிட
நரகல் தவிர்த்து அமரப்போதில்
வெளிச்சம் வெட்கி விளகிக்கொள்ளும்
அவ்அவதை தீர்க்கும் அவதையில்
சின்னஞ்சிறுவன் ஒருவன் தண்டவாளக் கூரில்
காதுவைத்து எதையோ தேட
என்இதய நிலையத்தில் சரக்குவண்டியொன்று
வந்து நின்று சற்றே அசைந்தது..
என்னடா தேடுகிறாய்...?
கூரம் தோய்த்த என்சொல்
அவனின் காதுகளைக் குத்தக்காணோம்..
அக்கா வண்டிச்சத்தம் கேட்கிறதக்கா என்கிறான்
பார்த்திருப்பானோ முள்ளொன்றை
பூப்பின் அவதையொத்த சொல்காந்த முள்
என் இதய வண்டியெங்கும் அடையாய்
அப்பிக்கொண்டது..
அவனின் முகமெங்குமோ பொங்கல் பூவின் கூம்புகள்
புத்தம் புதிதாய் பூத்திருந்தன...
கவிதை : ராகவப்பிரியன்
இதயம் குத்த தண்டவாளப் புதர்தேடியமர்ந்தேன்..
காலில் குத்திய காய்முள்கூம்புகள்
பாவாடைகளில் பதியனிட
நரகல் தவிர்த்து அமரப்போதில்
வெளிச்சம் வெட்கி விளகிக்கொள்ளும்
அவ்அவதை தீர்க்கும் அவதையில்
சின்னஞ்சிறுவன் ஒருவன் தண்டவாளக் கூரில்
காதுவைத்து எதையோ தேட
என்இதய நிலையத்தில் சரக்குவண்டியொன்று
வந்து நின்று சற்றே அசைந்தது..
என்னடா தேடுகிறாய்...?
கூரம் தோய்த்த என்சொல்
அவனின் காதுகளைக் குத்தக்காணோம்..
அக்கா வண்டிச்சத்தம் கேட்கிறதக்கா என்கிறான்
பார்த்திருப்பானோ முள்ளொன்றை
பூப்பின் அவதையொத்த சொல்காந்த முள்
என் இதய வண்டியெங்கும் அடையாய்
அப்பிக்கொண்டது..
அவனின் முகமெங்குமோ பொங்கல் பூவின் கூம்புகள்
புத்தம் புதிதாய் பூத்திருந்தன...
கவிதை : ராகவப்பிரியன்
No comments:
Post a Comment